சீரற்ற வானிலையால் மெல்பேர்ண், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மெல்பேர்ண் விமான நிலையத்திலிருந்து புறப்பட விருந்த 8 விமானங்கள் கடும் காற்றால் நிறுத்தப்பட்டன.அதேபோல மெல்பேர்ண் விமான நிலையத்துக்கு வரவிருந்த 10 விமானசேவைகளும் இரத்து செய்யப்பட்டன.
பிரிஸ்பேன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த ஐந்து விமானங்கள் தமது சேவையை நிறுத்தியது.
சிட்னி விமான நிலைய சேவைகளும் ஸ்தம்பித்துள்ளன. குறிப்பாக 90 உள்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
மெல்பேர்ணில் சில பகுதிகளில் இன்று காலை ஆழங்கட்டி மழை பெய்துள்ளது.