வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட இரு கொள்கலன்களில் இருந்து 41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலள்களில் இருந்தே இவ்வாறு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நால்வருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தீர்ப்பு இம்மாதம் வழங்கப்படவுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து ஆஸ்திரேலிய துறைமுகங்களுக்குவரும், குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டுவருகின்றது.