ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தமது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு கனடா திட்டமிட்டுள்ளது.
கனடாமீது அமெரிக்கா வர்த்தகப்போரை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதற்கமைய கனடாவின் வர்த்தக அமைச்சர் மேரி என்ஜி, ஜெனிவாவில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
உலக வர்த்தக அமைப்பின் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பிரிதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கனடாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள நிலையில், அதனை மேலும் விஸ்தரிப்பதற்குரிய முயற்சியும் இடம்பெறுகின்றது.
அத்துடன், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு கனடா திட்டமிட்டுள்ளது. மேற்படி நாடுகளுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளது.