ஆஸ்திரேலியாவின் தென்மாநில பகுதியில் வார இறுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சீரக்க காலநிலையில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் டாஸ்மானியாவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல குடும்பங்கள் மின்சாரம் இன்றி பரிதவித்துவருகின்றன.
கடும் காற்றால் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகள்மீது முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றி, மக்களை பாதுகாக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று வானிலை ஓரளவு சீராக இருந்தாலும் வார இறுதியில் கடும் காற்று வீசும் என வளிமண்டளவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கையும் நீடிக்கின்றது.
சீரற்ற காலநிலையால் நியூ சவூத் வேல்ஸ் மாநிலயத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.