செம்போ போத்தல்களுக்குள் மறைத்து ஆஸ்திரேலியாவுக்கு கொக்கைன் கடத்திவந்த அமெரிக்க பெண், மெல்பேர்ண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெல்பேர்ண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் நேற்று முற்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரையில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்திவந்த மூன்று வெளிநாட்டவர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.