ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குடிவரவுக் கைதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூடானில் பிறந்த 28 வயது இளைஞர் ஒருவரே மெல்பேர்ணில் வைத்து நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா மற்றும் கட்டாய ஊடரங்கு விதிமுறைகளை மீறல் உட்பட அவருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இக்குற்றத்துக்காக ஐந்தாண்டுகள் சிறை மற்றும் அபராதம் என்பன விதிக்கப்படக்கூடும்.