1980 களில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் சிட்னி குடும்ப நல நீதிமன்றம்மீதான தாக்குதல் என்பவற்றுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார்.
78 வயதான லியோனார்ட் ஜான் வார்விக் என்பவரே இன்று முற்பகல் 10.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என அதிகாரிகள் அறிவித்துள்ளன.
1980 காலப்பகுதியில் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது.
தனது வழக்கை விசாரித்த நீதிபதியையும் அவர் சுட்டுக்கொன்றுள்ளார். நீதிபதியின் மனைவி மற்றும் பிள்ளைகளும் இச்சம்பவத்தில் காயம் அடைந்தனர்.
வழக்கு விசாரணைகளையடுத்து 2020 ஆம் ஆண்டிலேயே இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொண்டுவந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.