ஆஸ்திரேலியாவில் வீடில்லா பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவரும் நிலையில், வெளிநாட்டவர்கள் தமது நாட்டில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இத்தடை ஈராண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2027 மார்ச் 31 ஆம் திகதிவரை வெளிநாட்டவர்கள், வீடுகளை வாங்க முடியாது என்று நிதி அமைச்சர் மற்றும் வீட்டு வசதி அமைச்சர் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஈராண்டுகளுக்கு பிறகு உரிய மதிப்பாய்வின் பின்னரே தடை நீக்கம் பற்றி முடிவெடுக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மே மாதம் கூட்டாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வீடில்லா பிரச்சினையும் முக்கிய பேசுபொருளாக மாறவுள்ள நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசாங்கம் சார்பில் வீடு கட்டி தரப்பட்டு , பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் நடைமுறையில் உள்ளது.
வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட் அனுமதிக்கப்பட்டிருந்தது.
சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தமது நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் இத்தடை அமுலுக்கு வந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.