குடும்ப வன்முறையில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை!
குடும்ப வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு வழிவகுக்கும் சட்டமூலம் நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் இம்மாதம் முன்வைக்கப்படவுள்ளது.
இச்சட்டத்தின் பிரகாரம் மீண்டும், மீண்டும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடும் நபர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளுது.
குறிப்பாக பிணை நிபந்தனைகளைமீறும் சந்தேக நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதுடன், 11 ஆயிரத்து 500 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல 28 நாட்களுக்குள் தெரிந்தே மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நிபந்தனைகளை மீறினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 16, 500 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
பிணை நிபந்தனைகளை மீறினால் தற்போது ஈராண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.