விக்டோரிய மாநில பொலிஸ் ஆணையாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பொலிஸ் தொழிற்சங்க உறுப்பினர்களால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு பதவி துறந்துள்ளார்.
கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்ததாக பொலிஸ் ஆணையாளர் ஷேன் பாட்டன் தெரிவித்தார்.
45 வருடகாலம் விக்டோரிய மக்களுக்கு காவல்துறை ஊடாக சேவையாற்ற கிடைத்தது பெரும் பாக்கியம் எனவும் அவர் கூறினார்.
புதிய பொலிஸ் ஆணையாளர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். அதுவரையில் துணை ஆணையாளர், பதவி ஆணையாளராக செயல்படுவார்.