ஆஸ்திரேலிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 4.1 ஆக குறைத்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே ரொக்க வட்டி வீதம் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் ரொக்க வட்டி வீதம் 4.35 ஆக தக்கவைக்கப்பட்டுவந்தது.
வட்டி வீதம் குறைக்கப்பட்டிருந்தாலும் பணவீக்கத்துக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் மேற்படி முடிவையடுத்து ஆஸ்திரேலியாவிலுள்ள பிரதான வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.