கூட்டாட்சி தேர்தலுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனீ அல்பானீஸி திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.
இதற்கமைய வசந்த காலத்தில் இரு மனங்கள் இணையும் திருமணம் நடைபெறும் என்று ஆஸ்திரேலியாவின் மகளீர் வார இதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமரின் காதலி ஜொடி ஹேடன் தெரிவித்துள்ளார்.
தங்களுக்குரிய அந்த மிக முக்கிய நாளை அரசியலுக்குள் சிக்கவைக்க விரும்பாததாலேயே தேர்தலுக்கு பிறகு நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அல்பானீஸி தனது முதல் மனைவியை விவகாரத்து செய்துள்ளதால் இத்திருமணம் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெறமாட்டாது என தெரியவருகின்றது.