மத்திய குயின்ஸ்லாந்தில் பச்சிளம் குழந்தையொன்றின் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 20 வயது இளைஞர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 22 ஆம் திகதி , பிறந்து 10 வாரங்களேயான குழந்தையொன்று உயிரிழந்திருந்தது.
உடலில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே குழந்தை மரணித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கினர்.
குடும்ப வன்முறை காரணமாக குழந்தை கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் 20 வயது இளைஞன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.