சிட்னி தென்மேற்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தாயும், மகளும் பலியாகியுள்ளனர்.
ஹக்கன்பெர்க்கில், செயின்ட் ஜான்ஸ் சாலையிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தையடுத்து 46 வயது பெண் வெளியில் வந்துள்ளார். தனது ஆறு வயது மகளை காப்பாற்றுவதற்காக மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவ்வேளையிலேயே தாயும், மகளும் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
வீட்டிலிருந்த நான்கு சிறார்கள் மேலும் எட்டு பேர் உயிர் தப்பியுள்ளனர்.
தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கடும் போராட்டத்துக்கு மத்தியில் தீயை கட்டுப்படுத்தினர்.
எனினும், தாயும், 6 மகளுட் மகளும் தீயில் எரிந்து கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
உயிர்தப்பியுள்ள 8 பேரில் சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
தீ பரவலையடுத்து தாய் வெளியில் வந்தாலும், தனது மகளை காப்பாற்றுவதற்காக உள்ளே சென்று, உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.