பிரிஸ்பேனுக்கு வடக்கே உள்ள பூங்காவொன்றில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்த 78 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 15 ஆம் திகதி குறித்த நபர், சிறுமியை பூங்காவிலுள்ள கழிப்பறை தொகுதிக்குள் அழைத்துச்சென்றுள்ளார்.
இதனை கண்ட நபரொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் பெப்ரவரி 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முற்படுத்தப்படவுள்ளார்.