மெல்பேர்ண் நோக்கி வந்த விமானத்தில் உறங்கிக்கொண்டிருந்த பயணியை எழுப்பிய விமான பணியாளர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்த வந்த விமானத்தில் பயணித்த 38 வயதான ஜேர்மன் பிரஜையொருவரே தாக்குதலை நடத்தியுள்ளார்.
விமானம் மெல்பேர்ணில் நேற்று முன்தினம் தரையிறங்கிய பின்னர் இது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விமான பயணத்தில் வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
மெல்பேர்ண் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவருக்கு, இரண்டு வருடகால நன்னடத்தை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறுதிபடுத்தப்பட்ட தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.