பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலான வடகொரியா மற்றும் ரஷ்ய கூட்டாண்மையை ஆஸ்திரேலியா கடுமையாக எதிர்க்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
ஜி - 20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தென்கொரிய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.
தென்கொரியாவுக்கான ஆஸ்திரேலிய உதவிகள் தொடரும் என்பதையும் பெனி வோங் இச்சந்திப்பின்போது உறுதிப்படுத்தினார்.
இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் பேச்சு நடத்தினார்.