Northern Territory எதிர்க்கட்சி தலைவராக பூர்வக்குடி பெண்ணான Selena Uibo நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்கும் முதல் பூர்வக்குடி பெண் என்ற பெருமையை இதன்மூலம் அவர் பெற்றுள்ளார்.
Northern Territory ஐ லேபர் கட்சி ஆண்ட நிலையில், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி தோல்விடைந்தது.
17 ஆசனங்களைக்கொண்ட நாடாளுமன்றத்தில் லேபர் கட்சிக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையிலேயே எதிர்க்கட்சி தலைவராக Selena Uibo
நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசில் அவர் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார். துணை எதிர்க்கட்சி தலைவராக Dheran Young
நியமிக்கப்பட்டுள்ளார்.
லேபர் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த Eva Lawler பதவி இறக்கப்பட்டுள்ளார். இதன்படி மாநிலத்தில் லேபர் கட்சியை வழிநடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.