இஸ்ரேலுக்கு சார்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய இராணுவ அதிகாரியொருவரின் பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி இஸ்ரேலுக்கு விசுவாசமானவர் எனவும், மொசாட் புலனாய்வு அமைப்பால் வழிநடத்தப்படக்கூடியவர் எனவும் ஆஸ்திரேலிய புலனாய்வு பிரிவு சந்தேகிக்கின்றது.
இதனையடுத்தே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை ஒரு வெளிநாட்டு அரசாங்கமாக தான் கருதவில்லை எனவும், எனவே, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கோரும்பட்சத்தில் இரகசிய தகவல்களை பகிர்ந்துகொள்ள தயாரென அந்த அதிகாரி கூறிள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
யூதரான குறித்த அதிகாரி ஆஸ்திரேலிய இராணுவத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இஸ்ரேலில் தான் மேற்கொள்ள பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்களை ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இவர் தெரியப்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
இவரது பாதுகாப்பு அனுமதி ஏற்கனவே இரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டிலும் எடுக்கப்பட்ட முடிவு சரியென்பது உறுதியாகியுள்ளது.