சுவிட்சர்லாந்து, சூரிச் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஆஸ்திரேலிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயது இளைஞர் ஒருவரே அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயது நபரொருவரை இலக்கு வைத்தே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் நோக்கம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் சுவிஸ் அதிகாரிகளுடன், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கலந்துரையாடி, தகவல்களைப் பெற்றுள்ளனர்.