சிட்னி வடமேற்கிலுள்ள போர் நினைவு சின்ன வளாகத்தில் நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மார்பு பகுதியில் நாஜி சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது எனவும், இதனையே அவர் காட்சிப்படுத்தி இருந்தார் எனவும் தெரியவருகின்றது.
நேற்றிரவு 7 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து 31 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
நாஜி சின்னத்தை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்.
சிட்னி மற்றும் மெல்பேர்ணில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.