மெல்பேர்ண் பிட்ஸ்ராய் கார்டன்ஸில் உள்ள கேப்டன் குக் சிலைமீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேதமாக்கப்பட்ட சிலை, புனரமைக்கப்பட்ட மீள நிறுவப்பட்டிருந்த நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் கேப்டன் குக் சிலையின் தலைப்பகுதியை அகற்றுவதற்கு இருவர் முற்பட்டுள்ளனர். இதனால் சிலையின் தலைப்பகுதி சேதமடைந்துள்ளது.
கடந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்துக்கு முதல் நாள் கேப்டன் குக்கின் சிலை சேதமாக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிலை மீள நிறுவப்பட்டது.
இந்நிலையிலேயே தற்போது மீண்டும் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த நாசகார செயலை விக்டோரிய மாநில பிரீமியர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சிசிவிரி காட்சிகள் ஊடாக குற்றவாளிகளை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.