தமது நாட்டுக்கு தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்படும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவை பாதுகாப்பதற்கு அமெரிக்கா முன்னிற்கும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
அமெரிக்காவில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கான ஆதரவு கொள்கை மாறாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும், தமது நாட்டுக்குரிய பாதுகாப்பை ஆஸ்திரேலியாவே முழு அளவில் கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும்,
உக்ரைனுக்கான ஆதரவு உள்ளிட்ட விடயங்களில் நாட்டின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
ரஷ்ய, உக்ரைன் போரில் உக்ரைனுக்கான ஆதரவு நிலைப்பாட்டை ட்ரம்ப் நிர்வாகம் மாற்றிவரும் நிலையில், உக்ரைனுக்கான ஆஸ்திரேலியாவின் ஆதரவு தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.