இஸ்ரேலிய நோயாளிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் காணொளி வெளியிட்ட சிட்னியை சேர்ந்த இரு தாதியர்களில், பெண் தாதியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரா அபு லெப்தே என்ற 26 வயது தாதியரே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி காணொளி யூத எதிர்ப்பு நடவடிக்கையாக கருதப்பட்டு நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
கடும் நிபந்தனைகளுடன் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், காணொளியில் தோன்றிய மற்றைய தாதியர் தொடர்பில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர்.