மெல்பேர்ண் Geelong பகுதியில் நாஜி வணக்கம் செலுத்திய ஏழு பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பெல் பார்கிலுள்ள குரோஷிய கிளப்பில் வைத்தே இவர்கள் நாஜி வணக்கம் செலுத்தி, அது தொடர்பான படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட ஏழு இளைஞர்களுக்கு எதிராக பொலிஸாரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் இவர்கள் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தினால் 12 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.