பசுபிக் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆஸ்திரேலியா அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய மேற்படி நாடுகளுக்கான ஆஸ்திரேலியாவின் நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டுமா என்பது பற்றி ஆராயப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மூலோபாயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பாதுகாப்பு குறைந்துவருவது தொடர்பிலும் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல தென்சீனக் கடல் உட்பட சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஆஸ்திரேலியாவின் பயிற்சி மற்றும் கண்காணிப்பு என்பன தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.