கூட்டாட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் கோல்டன் விசா திட்டத்தை மீள அமுல்படுத்துவது தொடர்பில் லிபரல் கட்சி பிரசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது.
அமெரிக்காவில் பணக்காரர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கு 'கோல்ட் கார்ட்" திட்டத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
கோல்ட் கார்டை பெறுவதற்கு 5 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆஸ்திரேலியாவிலும் கோல்டன் விசா திட்டத்தை மீள அமுலாக்குவது பற்றி கருத்து எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு கோல்டன் விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதிக சொத்து மதிப்புமிக்க வெளிநாட்டு தொழில் அதிபர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கும் வகையிலேயே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்தது. எனினும், ஆஸ்திரேலியா நினைத்தபடி இந்த கோல்டன் விசா திட்டம் ஆஸ்திரேலியா நாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அளவில் உதவவில்லை. இதனால் இத்திட்டம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் திட்டம் மீள அமுலாகலாம் என்ற நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வெளிப்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.