வர்த்தக மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியாவுடனான பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான திட்டம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கிடைக்கவுள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பெறுவதற்கு தற்போதிலிருந்தே ஆஸ்திரேலியா வியூகம் வகுத்து செயற்படுகின்றது என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவு வலிமையாகவும், ஆழமானதாகவும் மற்றும் முக்கியமானதாகவும் உள்ளது எனவும் எதிர்காலத்தில் அது மேலும் பலப்படுத்தப்படும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்துள்ளார்.
குவாட் அமைப்பில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.