ஆஸ்திரேலிய பொருளாதாரம் மந்த கதியிலேயே வளர்ச்சியடைந்து வருகின்றது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜுன் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வேகம் 0.2 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஜுன் காலாண்டுக்கான வளர்ச்சி வேகம் 1 சதவீதமாக அமைந்திருந்தது.
1991 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பதிவாகியுள்ள வருடாந்த பலவீனமான பொருளாதார வளர்ச்சி வீதமாக இது அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1991 காலப்பகுதியிலும் இதேபோன்றதொரு நிலைமையே ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருந்தது.
அதன்பின்னர் பொருளாதார வளர்ச்சி வீதம் வேகமெடுத்தது. கொரோனா காலப்பகுதியில் மீண்டும் சரிவை சந்தித்தது.
இந்நிலையிலேயே தற்போது வளர்ச்சி வேகம் மந்த கதியில் உள்ளது. ஜுன் காலாண்டில் 0.9 சதவீத வளர்ச்சி வேகத்தை மத்திய வங்கி எதிர்பார்த்திருந்தது.