மெல்பேர்ணில் இரு புதிய தட்டம்மை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை நோய்க்குரிய வைரஸ் சமூகத்தில் தீவரமாக பரவக்கூடும் என்று விக்டோரிய மாநில சுகாதார அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரையில் விக்டோரியாவில் 8 பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, நோய்க்குறிய அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் தடுப்பூசி ஏற்றாதவர்கள் இந்நோயால் பெரிதும் பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
சபா.தயாபரன்