உலகிலேயே அதிக மார்பகப் புற்றுநோய் விகிதங்களைப் பதிவு செய்துள்ள நாடுகளாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்பன இருக்கின்றபோதிலும், இறப்பு வீதம் குறைவடைந்துவருகின்றது.
இதற்கமைய இறப்பு வீதமென்பது வருடாந்தம் 2.1 வீதத்தால் குறைவடைந்துவருகின்றது என புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிட்னி பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா சுகாதார சேவைகள் ஆகியவற்றின் ஆய்வில், 185 நாடுகளில் உலகளாவிய மார்பகப் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் ஆராயப்பட்டன.
உலகளவில் 20 பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 70 பேரில் ஒருவர் இந்த நோயால் இறக்க வாய்ப்புள்ளதாகவும் கண்டறியப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் ஏழு பெண்களில் ஒருவருக்கும், 556 ஆண்களில் ஒருவருக்கும் அவர்களின் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படும் என்று தேசிய மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சராசரியாக, ஒவ்வொரு நாளும் 58 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் நோயறிதல் விகிதங்கள் அதிகமாக இருந்தபோதிலும், இரு நாடுகளும் தங்கள் மார்பகப் புற்றுநோய் இறப்பை ஆண்டுக்கு 2.1 சதவீதம் குறைத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சபா.தயாபரன்