விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய பகுதிகளில் கடும் காற்றுடனான சீரற்ற காலநிலை நிலவும் நிலையில், ஆஸ்திரேலியாவின் ஏனைய சில பகுதிகளுக்கு காட்டு தீ அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் மாதங்களில் காட்டு தீ அபாய எச்சரிக்கை உள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியாவின் தென்மேற்கு பகுதி மற்றும் Northern Territory ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் கடந்தமாதம் வழமைக்கு மாறாக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
குயின்ஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டு தீயில் 70 இற்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில் தீ அனர்த்தத்தை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.