ஆல்பிரட் வெப்பமண்டல சூறாவளி எதிர்வரும் வியாழக்கிழமை தென்கிழக்கு குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவுத் வேல்ஸை உடறுத்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால் கடும் மழை மற்றும் புயல் என்பன வீசக்கூடும் எனவும், அனர்த்தங்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1974 ஆம் ஆண்டு அதேபோன்றதொரு வெப்பமண்டல சூறாவளி ஆஸ்திரேலிய கரையோரப் பகுதிகளை தாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் உள்ள டெவாண்டின் மற்றும் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிராஃப்டன் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள பகுதிகளை ஆல்ஃபிரட் புயல் தாக்கும் என வளிமண்டயவியல் திணைக்களம் கூறியுள்ளது.
முதலாவதாக, புதன்கிழமை பிற்பகுதியில் இருந்து மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபா.தயாபரன்