விமானியின் அறையில் புகை: அவசரமாக தரையிறங்கிய விமானம்!
QF643 விமானம் மேற்கு ஆஸ்திரேலிய தலைநகருக்கு காலை 8.40 மணியளவில் சிட்னியில் இருந்து புறப்பட்டது. ஆனால் 25 நிமிடங்களுக்குப் பிறகு தலைமை விமானியின் அவசர வேண்டுகோளுக்கிணங்க விமானம் தரையிறங்கியது. விமானம் அவசர தரையிறங்களுக்குக் காரணம் விமானியின் அறையில் ஏற்பட்ட புகை என்று அறிய வருகின்றது.
"சிட்னியிலிருந்து பெர்த் நோக்கிச் செல்லும் எங்கள் விமானங்களில் ஒன்று, இன்று காலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு குறித்துப் புகாரளித்த பிறகு, சிட்னிக்குத் திரும்பியது" என்று குவாண்டாஸின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள எங்கள் விமானிகள் அதிக பயிற்சி பெற்றவர்கள், மேலும் பொருத்தமான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது"
குவாண்டாஸின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில் இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குழப்பமான அனுபவமாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் பொறியாளர்கள் இன்று விமானத்தை சோதனை செய்வார்கள், மேலும் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம். பயணிகளுக்கு கூடுதல் விமானம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
சபா.தயாபரன்.