தென்கிழக்கு குயின்ஸ்லாந்தை 'ஆல்பிரட்" வெப்பமண்டல சூறாவளி தாக்கவுள்ள நிலையில், அதனால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆல்பிரட் சூறாவளி அழிவுகரமான புயல் மற்றும் பாரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், இதனால் 50 லட்சம்வரையான வீடுகள்வரை பாதிக்கப்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சூறாவளி பிரிஸ்பேனுக்கும் சன்ஷைன் கோஸ்டுக்கும் இடையில் வியாழக்கிழமை பிற்பகுதியில் அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு மக்கள் முன்னேற்பாடுகளை செய்துவருகின்றனர்.