சிட்னி மேற்கு பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் தொடர்பில் நால்வருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணியளவிலேயே இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய குழுவினருக்கிடையில் மோதல் வெடித்துள்ளது. கல் மற்றும் பொல்லுகளை பயன்படுத்தியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
21 மற்றும் 40 வயதுடைய ஆண்கள் தாக்குதலில் காயமடைந்தனர்.
38 மற்றும் 53 வயதுடைய இருவரும், இரு சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பொலிஸ் பிணை மறுக்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு சிறார்களும் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.