உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்குரிய ஏற்பாடுகளுக்கு ஆஸ்திரேலியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
ஆபிரிக்கா மற்றும் சைபிரஸில் அமைதி காக்கும் பகுதிகளில் ஆஸ்திரேலியா வரலாற்று ரீதியிலான பங்களிப்பை வழங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உக்ரைனில் அமைதியை காண நாம் விரும்புகின்றோம் எனவும், ஏகாதிபத்தியவாதி புடினுக்கு சாதகம் ஏற்படாத வகையிலேயே அதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.
அதேவேளை, உக்ரைனுக்கான ஆஸ்திரேலிய உதவிகள் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டட் டட்டன் தெரிவித்தார்.