ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தலை ஏப்ரல் 12 ஆம் திகதி நடத்துவதற்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸி திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் மார்ச் 8 ஆம் திகதி மாநில தேர்தல் நடைபெறுகின்றது. அத்தேர்தலுக்கு பின்னர் ஆளுநர் நாயகத்தை சந்திப்பதற்கு பிரதமர் தயாராகிவருகின்றார்.
அந்த சந்திப்புக்கு பிறகு தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் நடைபெறவுள்ளதால் பாதீட்டுக்கு பதிலாக இடைக்கால கணக்கறிக்கையொன்று முன்வைக்கப்படலாம்.
கூட்டாட்சி தேர்தலானது மே 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையிலேயே அதனை ஏப்ரல் 12 ஆம் திகதி நடத்துவது பற்றி ஆராயப்படுகின்றது.