இஸ்ரேலிய நோயாளிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இரண்டாவது தாதியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாங்க்ஸ்டவுன் வைத்தியசாலையில் சேவையாற்றிய 27 வயதான மஹ்மத் ரிஷாத் நாதிர் என்ற தாதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மாத இறுதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
வீடியோவில் தோன்றிய பெண் தாதியர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் மருத்துவ சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.