தேடப்படுபவர்களின் பட்டியலில் இருந்த நபரொருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.
கோல்ட் கோஸ்ட் பகுதியில் வைத்தே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தில் தப்பிச்செல்ல முற்பட்டவேளையிலேயே அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் வைத்தே துணை மருத்துவர்கள் சிகிச்சையளித்தாலும், அவர் உயிரிழந்துவிட்டார்.