83 வயதான முன்னாள் உயர்மட்ட ஒளிபரப்பாளர் ஜோன்ஸ் மீது மேலும் ஒரு பாலியல் சீண்டல் வழக்கு பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் அவர் மீது சாட்டப்பட்ட பாலியல் சீண்டல் குற்றங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
பல தசாப்தங்களாக ஒளிபரப்புத் துறையில் ஜாம்பாவனாக கொலோச்சி வந்த ஆட்சி செய்த ஆலன் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை அநாகரீகமான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார்.
2001 மற்றும் 2019 க்கு இடையில் பல அநாகரீகமான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் தொடுதல் சம்பவங்களை விசாரித்த சிட்னி காவல்துறையினரின் எட்டு மாத விசாரணைக்குப் பிறகு 11 பேர் தொடர்பாக 35 குற்றச்சாட்டுகள் நவம்பர் மாதம் ஜோன்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
திரு. ஜோன்ஸ் மார்ச் 11 செவ்வாய்க்கிழமை டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
சபா.தயாபரன்