Northern Territory இல் முதன்முறையாக கிறீன்ஸ் கட்சியினர் ஆசனமொன்றைக் கைப்பற்றுவதற்குரிய சாத்தியம் உதயமாகியுள்ளது.
விருப்பு வாக்கும் எண்ணும் பணி இடம்பெற்றுவரும் நிலையில் கிறீன்ஸ் கட்சி வேட்பாளர் Kat McNamara , லேபர் கட்சி வேட்பாளர் Natasha Fylesஐ விட ஐ முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் கிறீன்ஸ் கட்சி வேட்பாளர் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியமே அதிகம் எனக் கூறப்படுகின்றது.
Northern Territory தேர்தலில் லேபர் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவும் லேபர் கட்சிக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.
Country Liberal கட்சி தேர்தலில் வெற்றிபெற்று அரியணையேறவுள்ளது. லேபர் கட்சி 4 ஆசனங்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற தொடர் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும்.