சிட்னி விமான நிலையத்துக்கு செல்லும் பஸ்ஸில் கத்தியுடன் பயணித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சக பயணிகள் வழங்கிய தகவலின் பிரகாரமே அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து இருக்கையை அவர் கத்தியால் குத்தி கிழித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவர் கத்தியை கீழே போட்டார். அதன்பின்னர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
31 வயதான குறித்த நபருக்கு எதிராக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பொது இடத்தில் கத்தியை காண்பித்தமை, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவருக்கு பொலிஸ் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம்போன்ற பாதுகாப்பு பகுதிகளுக்கு ஆயுதங்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்காக நான்கு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.