ஆல்பிரட் வெப்பமண்டல சூறாவளித் தாக்கத்தால் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் கடும் மழை பெய்துவருகின்றது. பிரிஸ்பேன், கோல்ட் கோஸ்ட் மற்றும் லோகன் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்கின்றது.
ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அபாய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை வெளியேறாமல் இருப்பவர்களுக்கு உடன் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்குயின்ஸ்லாந்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேற்றிரவு மின்சாரம் இன்றி பரிதவித்தன. வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், சீரற்ற காலநிலையில் வடக்கு நியூ சவூத் வேல்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளப்பெருக்கால் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. வாகன சாரதிகளுக்கு பயணம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக 18,500 பேருக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தென்குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவூத் வேல்ஸில் மின்சாரம் இன்றி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பரிதவித்துவருகின்றன. நாளையும் மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.