பேர்த் கடற்கரையில் சுறா தாக்குதலுக்கு இலக்கான 30 வயதான சர்பர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
நேற்று பிற்பகல் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுறா தாக்குதலுக்கு இலக்காக அவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தேடுதல் பணி இடம்பெற்றுவருகின்றது.
2017 ஆம் ஆண்டு முதல் டியூக் ஆஃப் ஆர்லியன்ஸ் விரிகுடா அருகே உள்ள நீரில் சுறா தாக்கில் மூவர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்