கடுமையான பிணை சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரிய மாநில அரசு உறுதியளித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மாநிலத்தில் குற்றங்களின் எண்ணிக்கை 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அத்துடன், வீடுகளில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களும் 24 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதேபோல கத்தி குற்றங்களும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கடுமையான பிணை சட்டங்களை அமுல்படுத்த விக்டோரிய மாநில பிரீமியர் தயாராகிவருகின்றார். இது தொடர்பான சட்டமூலம் அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
சபா.தயாபரன்