வடக்கு குயின்ஸ்லாந்தில் கைதியொருவரவரை தாக்கினர் எனக் கூறப்படும் இரு பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
Mareeba கண்காணிப்பு மையத்தில் வைத்தே 23 வயது இளைஞர்மீது கடந்த ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
43 மற்றும் 51 வயதுகளுடைய இரு பொலிஸ் அதிகாரிகள்மீது கைதியின் உரிமை மீறில், தாக்குதல் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இரு அதிகாரிகளும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் கண்காணிப்பு நிலையத்தில் பூர்வக்குடி சிறுவன் ஒருவர்மீது அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றியும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.