மெல்பேர்ண் வடமேற்கு பகுதியிலுள்ள உயர்நிலை பாடசாலையொன்றுக்கு முன்னால் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சிறார்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், 14 மற்றும் 17 வயதுகளுக்கட்பட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வாகனம் திருட்டு, தவறான நடத்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
அறுவரும் இன்று சிறார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.