சிட்னி வடமேற்கில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
39 வயதான நபரொருவர் நேற்று மாலை முதல் காணாமல்போயிருந்தார் என பொலிஸாரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர். இந்நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.