அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதன்மூலம், வர்த்தகப்போரிலிருந்து அமெரிக்காவை பின்வாங்க வைக்க வேண்டும் என்று லேபர் கட்சியின் முன்னாள் அமைச்சர் பில் ஷார்டன் தெரிவித்தார்.
எஃகு மற்றும் அலுமினியம்மீதான வரி விடயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு விலக்களிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் மறுத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எனினும், ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா வரிவிலக்களிக்ககூடும் என லேபர் அரசு எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, விவசாயம் உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்கா வரிகளை அமுல்படுத்தினால் ஆஸ்திரேலியாவின் இறைச்சி ஏற்றுமதி உள்ளிட்ட விடயங்களிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இது விடயம் தொடர்பில் ஆஸ்திரேலிய விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.
கூட்டாட்சி தேர்தல் நெருங்கும்வேளை, ஆஸ்திரேலியாமீதும் ட்ரம்ப் வர்த்தகப்போர் தொடுத்துள்ளமை, லேபர் அரசுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.